மாதவரம் அருகே கார் ஓட்டுநரைத் தாக்கி ரூ. 4 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
சென்னை சௌகார்பேட்டையைச் சேர்ந்தவர் ஜிதேந்தர் (54). இவர், ஊவர் மாதவரம் அருகே பழைய அலுமினியம், காப்பர் ஆகியவற்றை உருக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரிடம் வியாசர்பாடி முல்லைநகர் 16-ஆவது தெருவைச் சேர்ந்தவர் அருண் (27) கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மாதவரத்தைச் சேர்ந்த புக்ராஜிடம் பழைய காப்பர் வாங்கியதற்காக ரூ. 4 லட்சம் வழங்குவதற்காக புதன்கிழமை அருண் சென்னையில் இருந்து மாதவரத்துக்கு காரில் சென்று
கொண்டிருந்தார்.
பொன்னியம்மன்மேடு ஜிஎன்டி சாலை அருகே வந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் காரை வழிமறித்து அருணை தாக்கியுள்ளனர். மேலும், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ. 4 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாதவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வணிக சிலிண்டர் விலை உயர்வு: வைகோ கண்டனம்

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

