இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

பன்றிக் காய்ச்சல்: அரசு தலைமை மருத்துவமனையில் விழிப்புணர்வு முகாம்

நகர அரசு தலைமை மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.பருவமழை, சுற்றுச்சூழல் மாற்றத்தின் காரணமாக காஞ்சிபுரம்

News image
Updated On :6 நவம்பர் 2018, 2:46 am IST


நகர அரசு தலைமை மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பருவமழை, சுற்றுச்சூழல் மாற்றத்தின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆங்காங்கே டெங்கு, பன்றிக்காய்ச்சல், மர்மக் காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. இதுபோன்ற காய்ச்சல்களைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கையின் பேரில், அனைத்து வட்டங்களிலும் கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் 4 பேர் உயிரிழந்ததாக ஆட்சியர் அண்மையில் தகவல் தெரிவித்தார். 
அதனைத் தொடர்ந்து, பன்றிக்காய்ச்சலுக்கும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பன்றிக் காய்ச்சலில் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. முகாமுக்கு, மருத்துவமனை கண்காணிப்பாளர் வள்ளியம்மை தலைமை வகித்தார். நகர் நல அலுவலர் முத்து முன்னிலை வகித்தார். 
இதில், மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள்,செவிலியர்கள் கலந்துகொண்டு பன்றிக்காய்ச்சலில் இருந்து தடுத்துக் கொள்ளும் வகையில் கை கழுவுதல் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. கைகள் வழியாகத்தான் நோய்த்தொற்றுகள் அதிகம் உண்டாகின்றன. அப்போது, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கைகளின் மூலமாகத்தான் நோய்க் கிருமிகள் எளிதில் பரவும். எனவே, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பலவகையான நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள இரண்டு கைகளையும் குழாய் நீரிலோ, சூடான அல்லது வெதுவெதுப்பான நீரிலோ, குளிர்ந்த நீரிலோ கழுவ வேண்டும். சிறிது திரவ சோப்பை உள்ளங்கையில் எடுத்து இரண்டு கைகளையும் பிசைந்து விரல்களை தேய்த்துக் கழுவினால் தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்கும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு மருத்துவர்கள் விளக்கமளித்தனர். 
இதையடுத்து, அனைத்து வார்டுகளிலும் காய்ச்சல் தடுப்பு முறைகளை உடனடியாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் வள்ளியம்மை செய்தியாளர்களிடம் கூறுகையில், பன்றிக் காய்ச்சலை குணப்படுத்தும் டாமி ஃப்ளூ மாத்திரைகள் சுமார் 2 ஆயிரம் இருப்பில் உள்ளன. கை கழுவும் முறை குறித்த செயல் விளக்கம் மருத்துவமனை வார்டுகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அளிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.