பட்டாங்குளம், மல்லியங்கரணை கிராமங்களில் தூய்மை இந்தியா விழிப்புணர்வுப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பட்டாங்குளம், மல்லியங்கரணை கிராமங்களில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரிச்சாமி, ராஜ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தூய்மை இந்தியா இயக்கத் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், கல்லூரி முதல்வர் (பொ) தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத் தொடர்ந்து, கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தை, கிளீன் இந்தியா என்ற ஆங்கில வார்த்தையின் வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதன் பின், முழுமையான சுகாதாரம், நெகிழி ஒழிப்பு குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். அதையடுத்து, பட்டாங்குளம் மற்றும் மல்லியங்கரணை கிராமங்களில் நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு, கழிப்பறையின் அவசியம், சுகாதாரம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, மாணவர்கள் பதாகைகள் ஏந்தியவாறு, துண்டுப் பிரசுரம் வழங்கி கிராமத்தில் உள்ள வீதிகள்தோறும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









