மதுராந்தகம் கிளியாற்றுப் பாலம் அருகே புதுவை முதல்வர் உறவினரின் கார் மோதி கட்டடத் தொழிலாளர் படுகாயம் அடைந்தார். இதைக் கண்டித்து அவரது சக தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் வன்னியர் பேட்டையைச் சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் விநாயகம் (32) கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் திங்கள்கிழமை காலையில்கருங்குழியில் இருந்து கட்டடப் பணிக்கான கருவிகளை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது புதுவையில் இருந்து வந்த கார் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் விநாயகத்தின் கால் பகுதி பலத்த சேதமடைந்தது. அவர் படுகாயமடைந்தார். இது குறித்து தகவலறிந்த விநாயகத்தின் உறவினர்கள், அவரை உடனடியாக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய காரில் பயணம் செய்தவர்கள் புதுச்சேரி முதல்வரின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. எனவே, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல், பாதிக்கப்பட்ட விநாயகத்தின் மீது வழக்குப் பதிய மதுராந்தகம் காவல்துறையினர் ஏற்பாடு செய்து வருவதாக விநாயகத்தின் உறவினர்களுக்குத் தெரிய வந்தது. இத்தகவலை விநாயகம் சார்ந்துள்ள தமிழ்நாடு கட்டுமான உழைப்புத் தொழிலாளர் நல மத்திய சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இதையடுத்து, மதுராந்தகம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தின் முன்பு இச்சங்கத்தினர் திங்கள்கிழமை மாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் அங்கு வந்தார். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் வழக்கு சம்பந்தமாக நாளை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, மதுராந்தகம் பஜார் வீதியில் ஒரு சிலர் போராட்டம் நடத்துவதற்காக சாலையில் அமர்ந்தனர். பின்னர் காவல்துறையினர் தலையிட்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

