ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் சாலை சீரமைப்பு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.128 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம், சுத்திகரிக்ப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாதாளசாக்கடைத் திட்டம் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான பணிகளுக்காக குழாய்கள் பதிக்க, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட தெருச்சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டதால் தெருச்சாலைகள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்தன.
இந்நிலையில், பாதாள சாக்கடைத் திட்டத்துக்கும், குடிநீர் வழங்கும் திட்டத்திற்கும் குழாய்கள் பதிக்கும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து சாலை சீரமைப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் உள்ள சுமார் 60-க்கும் மேற்பட்ட தெருச்சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் விஜிபி சந்தோஷம் நகர், கோவர்த்தன நகர் ஆகிய பகுதிகளில் உள்ள நான்கு ஆழ்துளைக் கிணறுகளை சீரமைக்கவும், ராகவேந்திரா தெரு பகுதியில் கூடுதலாக ஆழ்துளைக் கிணறு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அப்பணிகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பழனி, பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா, உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





