செங்கல்பட்டு நகராட்சியில் ரூ. 30 லட்சம் மதிப்பில் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையத்தை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.
செங்கல்பட்டு வார்டு எண்- 27 குண்டூர் மேட்டுத்தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, செங்கல்பட்டு நகராட்சி ஆணையராக பணியாற்றிய மாரிச்செல்வி, தாம்பரம் பிராந்திய பொறியாளர் வி.முருகேசன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜி.ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் நித்யா, மேலாளர் முனுசாமி உள்ளிட்டோர் முன்னிலையில், ரூ. 30 லட்சம் மதிப்பில் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையத்தை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில், ஆர்ஓ வாட்டர் பிஏஎஸ்எஃப் கேட்டலிஸ்ட் இன்டியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் அனில் செளத்ரி, சிஎஸ்ஆர் தலைமை அதிகாரி டி.பார்த்தசாரதி, வாட்டர் லைப் நிறுவன நிர்வாக இயக்குநர் சுதீஷ்மேனன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிலையத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் வரை குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்படும் என செங்கல்பட்டு நகராட்சி செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர் மரகதம் குமரவேல், கோட்டாட்சியர் முத்துவடிவேல், வட்டாட்சியர் பாக்கியலட்சுமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அதிமுக மாவட்டச் செயலர் எஸ்.ஆறுமுகம், முன்னாள் மக்களவை உறுப்பினர் காஞ்சி.பன்னீர் செல்வம், முன்னாள் நகர் மன்றத் தலைவர் ஜெயா ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடற்படை தலைமைத் தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

காவல்கார கருப்பு மேக்கிங் விடியோ!

இந்த வாரம் கலாரசிகன் - 31-05-2026
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்


