குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

போலி துப்பாக்கியைக் காட்டி ரூ.20 லட்சம் வழிப்பறி

பாலுசெட்டிசத்திரம் அருகே போலி துப்பாக்கியைக் காட்டி ரூ.20 லட்சத்தை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.  

Updated On :26 பிப்ரவரி 2019, 4:08 am IST


பாலுசெட்டிசத்திரம் அருகே போலி துப்பாக்கியைக் காட்டி ரூ.20 லட்சத்தை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.  
கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர் அடகு நகைகளை வாங்கி விற்கும் முகவராக உள்ளார்.  
இவரை சிலர் தொடர்புகொண்டு, அடகு வைத்து மீட்கப்பட்ட 2 கிலோ  தங்க நகைகள்  தங்களிடம் இருப்பதாகவும், ரூ.20 லட்சம் கொடுத்தால் 2 கிலோ நகைகளை தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய மணிகண்டன் ரூ.20 லட்சம் ரொக்கத்துடன், கிருஷ்ணகிரியில் இருந்து காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டிசத்திரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துள்ளார். அங்கு, நகை இருப்பதாகக் கூறி மணிகண்டனை வரவழைத்த நபர்கள், அவரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ரூ.20 லட்சத்தை வழிப்பறி செய்து தப்பியோடியுள்ளனர். 
இதுதொடர்பாக, பாலுசெட்டிசத்திரம் காவல்நிலையத்தில் மணிகண்டன் திங்கள்கிழமை புகார் அளித்தார்.  அதன்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி வழிப்பறியில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடிக்க தனிப்படை போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு 406, 420, 417, 395,3 97 ஆகிய 5 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், வழிப்பறியில் 4 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அப்பகுதிமக்கள் சிலர் அடையாளம் காட்டியுள்ளனர். மேலும், வழிப்பறி கொள்ளையர்கள் ஆன்லைன் மூலம் ரூ.1,700-க்கு பொம்மை துப்பாக்கி வாங்கியதும், அதைக் காட்டி மிரட்டி மணிகண்டனிடம் பணம் பறித்துள்ளதும் தெரிவந்துள்ளது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.