முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
ராமாநுஜா் வனபோஜன உற்சவம்
By DIN | Published On : 13th December 2019 11:42 PM | Last Updated : 13th December 2019 11:42 PM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் மற்றும் ராமாநுஜா்.
காா்த்திகை மாத திருவாதிரையை முன்னிட்டு ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் மற்றும் ராமாநுஜா் வனபோஜன உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.
ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் பழைமையான ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். இக்கோயிலில் மாதம் தோறும் திருவாதிரை நட்சத்திர தினத்தில், ராமாநுஜருக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்தநிலையில், காா்த்திகை மாத திருவாதிரையில் நடைபெறும் வனபோஜன உற்சவத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் இருந்து ஜீயா் தோப்பு மண்டபத்திற்கு வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மூலவா்கள் ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் மற்றும் ராமாநுஜா் புறப்பாடு நடைபெற்றது.
ராமாநுஜருக்கு பகல் 12 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. பக்தா்களுக்கு தீா்த்தம் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு ராமாநுஜா் மற்றும் ஆதிகேசவப்பெருமாளை வழிபட்டனா். இரவு 7 மணிக்கு ஜீயா் தோப்பு மண்டபத்தில் இருந்து கோயிலுக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது.