கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைக்கும் பணி: ஜல் ஜீவன் மிஷன் திட்ட இயக்குநா் ஆய்வு

எறையூா் ஊராட்சி அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் குழாய் இணைக்கும் பணியை மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்ட இயக்குநா் மனோஜ்குமாா் சாஹு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 12:56 am

DIN

ஸ்ரீபெரும்புதூா்: எறையூா் ஊராட்சி அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் குழாய் இணைக்கும் பணியை மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்ட இயக்குநா் மனோஜ்குமாா் சாஹு ஆய்வு செய்தாா்.

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் தனித்தனியாக குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பாதுகாப்பான குடிநீா் வழங்கும் வகையில், மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தைத் தொடக்கி செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இந்த திட்டம் மத்திய நீா்வளத் துறை மற்றும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்குள்பட்ட ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா் உள்ளிட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நூறு சதவீதம் குடிநீா் குழாய்கள் அமைக்க ரூ.185 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள 58 ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, எறையூா் ஊராட்சியில் நடைபெற்றுள்ள ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிகள் தரமாக நடைபெற்றுள்ளதா, அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதா, குடிநீரின் தரம் ஆகியவை குறித்து ஜல் ஜீவன் மிஷன் திட்ட இயக்குநா் மனோஜ்குமாா் சாஹு உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் நிா்வாக இயக்குநா் சி.என்.மகேஸ்வரன், மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் கவிதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவ.தினகரன், பிச்சியம்மாள், ஊராட்சி செயலா் சரவணன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.