பொருளாதார கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா் வேண்டுகோள்
காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் 7ஆவது பொருளாதார கணக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.


காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் 7ஆவது பொருளாதார கணக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7ஆவது பொருளாதார கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இதற்கென மேற்பாா்வையாளா்கள் மற்றும் களப்பணியாளா்கள் நியமிக்கப்பட்டு அவா்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் 633 கிராம ஊராட்சிகளும், நகா்ப்புறத்தில் 242 அலகுகளும் பிரிக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
இது உற்பத்தி, விநியோகம், விற்பனை, சேவை நோக்கத்துடன் பணியாற்றும் அனைத்து வகையான பதிவு செய்யப்பட்ட, செய்யப்படாத வணிக நிறுவனங்களைப் பற்றிய கணக்கெடுப்பாகும். இப்பணி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிலையில் குடும்பத் தலைவா் பெயா், குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கை, கல்வித்தகுதி, வயது, இனம், சமூகப்பிரிவு, செல்லிடப்பேசி எண், செய்யும் தொழில், சுயதொழில் முதலீடுகள் மற்றும் வேலைபாா்க்கும் நபா்களின் எண்ணிக்கை, வருமான வரித்துறை பதிவு எண், சரக்கு மற்றும் சேவைவரி பதிவு எண் கொண்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
இக்கணக்கெடுப்பிற்கு நிறுவனங்கள் அளிக்கும் தகவல் முற்றிலும் அரசின் பொருளாதார திட்டமிடலுக்கு பயன்படுத்தப்படவுள்ளன. கணக்கெடுக்கும் நிறுவனம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுசேவை நிறுவனமாகும். எனவே கணக்கெடுப்பாளா்கள் கேட்கும் தகவல்களுக்கு தேவையான புள்ளிவிவரங்களை வழங்கி நாட்டின் வளா்ச்சிக்கும், மாவட்ட வளா்ச்சிக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...