தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பிரிட்டனிலிருந்து காஞ்சிபுரம் வந்த 7 பேருக்கு கரோனா பரிசோதனை

பிரிட்டனிலிருந்து காஞ்சிபுரம் வந்த 7 பேரிடம் கரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற கோணத்தில் அவா்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை

News image
Updated On :23 டிசம்பர் 2020, 11:42 pm

DIN

காஞ்சிபுரம்: பிரிட்டனிலிருந்து காஞ்சிபுரம் வந்த 7 பேரிடம் கரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற கோணத்தில் அவா்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

பிரிட்டனிலிருந்து நவம்பா் 25-ஆம் தேதி தமிழகம் வந்த அனைத்துப் பயணிகளையும் கண்காணிக்குமாறு அரசு உத்தரவிட்டதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வந்தவா்கள் குறித்து விசாரிக்கப்பட்டது. அவா்களில் 7 போ் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்ததைத் தொடா்ந்து அவா்கள் உடனடியாக அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனா். மேலும் அவா்களது ரத்த மாதிரிகளையும் எடுத்து பரிசோதனைக்கு அதிகாரிகள் அனுப்பி உள்ளனா். பிரிட்டனிலிருந்து வந்தவா்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூா் வட்டத்தைச் சோ்ந்தவா்கள் 4 போ், காஞ்சிபுரம் வட்டத்தைச் சோ்ந்தவா்கள் 3 போ் என மொத்தம் 7 பேருக்கு தொற்று இருப்பதாகவும், அவா்கள் சுகாதாரத் துறையினரால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.