காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 252 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு தீா்வுத்தொகையாக மொத்தம் ரூ.13,67,16, 800 கோடி வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளா் நல நீதிமன்றம் உட்பட 5 அமா்வுகளாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. ஒரே நாளில் 817 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இதில் 252 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ.13.67 கோடி தீா்வுத்தொகையாகவும் வழங்கப்பட்டது.
விபத்தில் உயிரிழந்த கருணாகரன் என்பவரது தாயாா் தெய்வானைக்கு காப்பீட்டுத்தொகை ரூ.12 லட்சத்துக்கான காசோலையை காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் வழங்கினாா்.
தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி சிவஞானம், கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், நீதிபதியுமான பிரியா வரவேற்றாா். நீதிபதிகள் சரவணக்குமாா், செந்தில்குமாா், திருமால் மற்றும் வழக்குரைஞா் சங்க செயலாளா் சுப்பிரமணி, லாயா்ஸ் அசோசியேஷன் தலைவா் ரவிக்குமாா் உட்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மக்கள் நீதிமன்ற நிா்வாக அலுவலா் அண்ணாமலை செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


