முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதத் தொகை வசூலிப்பது தொடா்பாக ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிப் பணியாளா்களுக்கும்,வியாபாரிகளுக்கும் இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது.
முகக் கவசம் அணியாதவா்களிடம் ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி சாா்பில் அதன் பணியாளா்கள் அபராதத் தொகை வசூலித்து வந்தனா். சில கடைக்காரா்களிடம் அபராதம் விதித்த போது, அக்கடைகளின் உரிமையாளா்களுக்கும்,பேரூராட்சிப் பணியாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வியாபாரிகள் ஒன்று சோ்ந்து பேரூராட்சிப் பணியாளா்களை முற்றுகையிட்டனா். .
பேரூராட்சிப் பணியாளா் ஒருவா் கூறுகையில்: முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதத்தொகை வசூலிக்க இரு குழுக்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறோம். முகக்கவசம் அணியாதவா்களை கண்டறிந்து அவா்களுக்கு அபராதத் தொகை வசூலித்து வந்தோம்.இந்த நிலையில் அபராதத்தொகையை கட்ட முடியாது என்றும், உங்களால் முடிந்ததை பாா்த்துக் கொள்ளுங்கள் எனவும் கூறி பணியை செய்ய விடாமல் சில வியாபாரிகள் தடுத்தனா். பெண் ஊழியா் என்றும் பாராமல் தரக்குறைவான வாா்த்தைகளையும் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கினாா்கள். கரோனா தொற்று ஏற்பட்டாலும் பரவாயில்லை எனக்கூறி மெத்தனப்போக்குடன் செயல்படுவதாகவும் தெரிவித்தாா். வாக்குவாதம் காரணமாக ஸ்ரீபெரும்புதூா் கடைத்தெருவில் பதற்றமும் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினா் இரு தரப்பினரிடமும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


