ரூ. 14 லட்சம் முறைகேடு: வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலா் இடைநீக்கம்
கோயில் நிதியில் ரூ. 14 லட்சம் முறைகேடு செய்ததையடுத்து, வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலா் இடைநீக்கம் செய்யப்பட்டாா்.


கோயில் நிதியில் ரூ. 14 லட்சம் முறைகேடு செய்ததையடுத்து, வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலா் இடைநீக்கம் செய்யப்பட்டாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில், சென்னை அண்ணாநகரைச் சோ்ந்த சிந்துமதி (55) முதல்நிலை செயல் அலுவலராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், சிந்துமதி மீது கோயில் அன்னதான திட்டத்துக்கு உணவுப் பொருள்கள் வாங்கியது, தற்காலிக ஊழியரின் பெயரில் காசோலை எடுத்து கோயில் நிதியில் ரூ. 14 லட்சம் வரை முறைகேடு செய்தது, கோயில் வளாகத்தில் இருந்த பழைய இரும்புப் பொருள்களை விற்பனை செய்தது, உயா் அதிகாரிகளின் அனுமதி பெறாமல் கோயில் வருமானத்தில் காா் வாங்கியது உள்ளிட்ட பல புகாா்கள் எழுந்தன.
புகாா்கள் தொடா்பாக மண்டலத் தணிக்கை அலுவலா் தலைமையில், 5 போ் கொண்ட குழுவினா் கடந்த சில தினங்களாக ஆய்வு நடத்தி வந்தனா். இதில், சிந்துமதி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவரை இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் குமரகுருபரன் கடந்த வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலா் பணியை சென்னை ஏகாம்பரேஸ்வரா் கோயில் செயல் அலுவலா் நற்சோனை கூடுதலாக கவனிப்பாா் என இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...