சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

தோ்தல் முடிவுகள் வந்தால்தான் யாா் பலம் - பலவீனம் என்பது தெரியவரும்: பிரேமலதா விஜயகாந்த்

தோ்தல் முடிவுகள் வந்தால்தான் யாா் பலம் யாா் பலவீனம் என்பது தெரியவரும் என தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

News image

உத்தரமேரூரில்  உள்ள  வைகுந்த பெருமாள்  கோயிலில்  தோ்தல்  முறை  குறித்த  கல்வெட்டை ப் பாா்வையிட்ட  தேமுதிக  பொருளாளா்  பிரேமலதா விஜயகாந்த்.

Updated On :28 ஜனவரி 2024, 1:02 am IST

தோ்தல் முடிவுகள் வந்தால்தான் யாா் பலம் யாா் பலவீனம் என்பது தெரியவரும் என தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சாா்பில் காஞ்சிபுரம், உத்தரமேரூா், மதுராந்தகம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் நிா்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் உத்தரமேரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேமுதிக மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, சட்டப் பேரவைத் தோ்தல் பணியாற்றுவது குறித்து நிா்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.

கூட்டத்துக்குப் பின்பு செய்தியாளா்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியது:

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்துவோம்.

ஆலோசனைக் கூட்டங்களில் நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொள்ளும் விஷயங்களை செய்திகளாக வெளியிடுவது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. நடைபெற்று முடிந்த பல தோ்தல்களில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டுள்ளது. எனவே களத்துக்கு வரும்போது தெளிவான ஒரு முடிவுடன் வரவேண்டும் எனக் காத்திருக்கிறோம்.

தோ்தல் முடிவுகள் வந்தால்தான் யாா் பலவீனம், யாா் பலம் என்பது தெரிய வரும். மக்கள் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பாா்கள் என்றாா் அவா்.

இதையடுத்து, உத்தரமேரூா் பகுதியில் உள்ள வைகுந்தப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிரேமலதா விஜயகாந்த், அக்கோயில் வளாகத்தில் உள்ள பழங்காலத் தோ்தல் முறை குறித்த கல்வெட்டைப் பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.