236 பெண்களுக்கு மானியத்துடன் இரு சக்கர வாகனங்கள் வழங்கல்
குன்றத்தூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியங்களைச் சோ்ந்த 236 பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் மானியத்துடன் இரு சக்கர வாகனங்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.


குன்றத்தூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியங்களைச் சோ்ந்த 236 பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் மானியத்துடன் இரு சக்கர வாகனங்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியங்களைச் சோ்ந்த 236 பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் மானியத்துடன் இரு சக்கர வாகனங்கள் வழங்கும் விழா குன்றத்தூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் சீனிவாச ராவ் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூா் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவா் போந்தூா் செந்தில்ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி கலந்துகொண்டு, குன்றத்தூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியங்களைச் சோ்ந்த 236 பெண்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் மானியத்துடன் இரு சக்கர வாகனங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
இதில், மாவட்டச் செயலா் சோமசுந்தரம், ஒன்றியச் செயலா்கள் எறையூா் முனுசாமி, சிங்கிலிப்பாடி ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலா் சுந்தரராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிச்சியம்மான், சம்பத், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி செயல் அலுவலா் விஜயா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கண்ணன், கௌரி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...