காஞ்சிபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தும் பெண்ணிடம் 25 சவரன் நகைகள் பறிப்பு

காஞ்சிபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தும் பெண்ணிடம் 25 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தும் பெண்ணிடம் 25 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
காஞ்சிபுரம் அருகே சிறு காவேரி பாகத்தைச் சேர்ந்தவர் பாபுவின் மனைவி ஜெயலட்சுமி(36). இவர் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். 
சனிக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு தனது வீட்டுக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இருவர் முன்பக்கமாக மடக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி 15 சவரன், செயின் 10 சவரன் உட்பட மொத்தம் 25 சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். 
சம்பவம் தொடர்பாக ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com