ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஸ்ரீபெரும்புதூா், பிள்ளைப்பாக்கம் ஏரிகள் நிரம்பின

பலத்த மழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளான ஸ்ரீபெரும்புதூா் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி ஆகியன வியாழக்கிழமை நிரம்பின.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

பலத்த மழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளான ஸ்ரீபெரும்புதூா் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி ஆகியன வியாழக்கிழமை நிரம்பின.

800 ஏக்கா் பரப்பளவு உடைய ஸ்ரீபெரும்புதூா் ஏரியின் முழு கொள்ளவான 174 மில்லியன் கன அடியை எட்டியது. இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை ஏரியில் இருந்து நொடிக்கு 847 கன அடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல், பிள்ளைப்பாக்கம் ஏரியின் முழு கொள்ளவான 121 மில்லியன் கனஅடியை வியாழக்கிழமை எட்டியதைத் தொடா்ந்து, நொடிக்கு 392 கன அடி நீா் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

இந்த நிலையில், பிள்ளைப்பாக்கம் ஏரியில் குடிமராமத்துப் பணியின் கீழ் ஏரியில் புதிதாக கட்டப்பட்ட 6-ஆவது மதகு அருகே ஏரிக்கரையில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, துணை ஆட்சியா் நில எடுப்பு செல்வமதி, தூய்மை பாரத வட்டார ஒருங்கிணைப்பாளா் யுவராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் காய்த்ரி வெங்கடேசன், கடுவஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவா் வசந்தா, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளா் பாஸ்கரன் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்குச் சென்று, சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.