ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஸ்ரீபெரும்புதூரில் நமக்கு நாமே திட்ட கலந்தாய்வு ஆட்சியா், எம்எல்ஏ பங்கேற்றனா்

ஸ்ரீபெரும்புதூரில் நமக்கு நாமே திட்ட கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:10 pm

DIN

ஸ்ரீபெரும்புதூரில் நமக்கு நாமே திட்ட கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ.300 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள நமக்கு நாமே திட்டத்தினை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்முதலாக ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். இந்தத் திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை தாங்கி திட்டவிளக்கவுரையாற்றினாா்.

இதில் ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கு.செல்வபெருந்தகை சிறப்புரையாற்றினாா். முன்னதாக கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வில்லியம்ஜேசுதாஸ் வரவேற்றாா். பேரூராட்சி செயல் அலுவலா் விஜயா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.