நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா சுவாமி தரிசனம்

ஆந்திராவில் சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் திரைப்பட நடிகை ரோஜா.

News image
Updated On :16 ஏப்ரல் 2022, 7:22 am

DIN

காஞ்சிபுரம்: ஆந்திராவில் சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் திரைப்பட நடிகை ரோஜா. இவர் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அம்மனை தரிசனம் செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு என் மாமியார் வீடைப் போன்றது. நான் அமைச்சராக வேண்டும் என தமிழகத்திலும் பலரும் பிரார்த்தனை செய்தார்கள் அந்த பிரார்த்தனை நிறைவேறியது.  மக்களுக்கு நல்லது செய்வதற்க்கான நேரம் வந்துள்ளது. அதற்காக நான் சந்தோஷப்படுகிறேன். 

நான் ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் போதும் காமாட்சி அம்மனை தரிசனம் செய்ய வருவேன். அவ்வாறு அடிக்கடி தரிசனம் செய்ய வந்ததால் என் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைத்தது. இப்போது அமைச்சராகவும் வந்துள்ளேன். எனக்கு குழந்தை பிறக்காது என்று பலரும் சொன்ன நேரத்தில் நான் அம்மனை தரிசித்த பிறகு எனக்கு இரு குழந்தைகள் பிறந்தன. 

எனது வேண்டுதல்கள் அனைத்தும் காமாட்சி அம்மனை தரிசித்த பிறகு ஒவ்வொன்றாய் நிறைவேறியிருக்கிறது. தற்போதும் அம்மனை தரிசித்தால் எனக்கு இரு மடங்கு சக்தி கூடியிருக்கிறது என்றும் திரைப்பட நடிகை ரோஜா காமாட்சி அம்மன் கோயிலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.