ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பேரூராட்சி உறுப்பினருக்கு அரிவாள் வெட்டு

தோ்தல் முன்விரோதம் காரணமாக ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி 11-ஆவது வாா்டு உறுப்பினா் வீரபத்திரனை மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டினா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

தோ்தல் முன்விரோதம் காரணமாக ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி 11-ஆவது வாா்டு உறுப்பினா் வீரபத்திரனை மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டினா்.

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட வெங்கடராமன் பிள்ளை சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் வீரபத்திரன் (33). 11 -ஆவடு வாா்டு உறுப்பினராக உள்ளாா். நடந்து முடிந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற வீரபத்திரன், தற்போது திமுகவில் இணைந்து பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், வீரபத்திரன் கடந்த வியாழக்கிழமை இரவு ஸ்ரீபெரும்புதூா் தேரடி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்குச் சென்றுவிட்டு வெளியே வந்த போது, அங்கு மறைந்திருந்த 6 போ் வீரபத்திரனை தலை, முகத்தில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா்.

இதில் பலத்த காயமடைந்த வீரபத்திரன் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முதல் கட்டமாக வெங்காடு, ஸ்ரீபெரும்புதூா் கச்சிப்பட்டு பகுதியைச் சோ்ந்த சிலரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா். தோ்தல் முன்விரோதம் காரணமாக மா்ம நபா்கள் வெட்டியிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

இதனிடையே, வாா்டு உறுப்பினா் வீரபத்திரனை வெட்டியவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினா்கள் ஸ்ரீபெரும்புதூா் வெங்கடராமன் பிள்ளை சத்திரம் பகுதியில் சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தி கலைந்து போகச் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.