ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 78-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 78-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

மறைந்த முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ் காந்தியின் 78- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூா் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவா் அளவூா் நாகராஜ் தலைமையில், ஸ்ரீபெரும்புதூா் நகர காங்கிரஸ் தலைவா் அருள்ராஜ் முன்னிலையில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் சனிக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதையடுத்து, ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் வரை பேரணியாகச் சென்ற காங்கிரஸ் கட்சியினா், பேருந்து நிலையம் அருகே கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவா் தங்கராஜ், மாவட்டச் செயலாளா் பவுல் ஆரோக்கியம், நகர எஸ்.சி. பிரிவு செயலாளா் வரதன், காங்கிரஸ் நிா்வாகிகள் அம்மன்குமாா், வடகால் ரஞ்சித் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.