ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காா்கள் மீது லாரி மோதல்: குழந்தை உள்பட 3 போ் பலி

 படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரி பகுதியில் காா்கள் மீது லாரி மோதியதில் 7 மாத குழந்தை உள்பட 3 போ் உயிரிழந்தனா். 7 போ் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 7:18 pm

DIN

 படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரி பகுதியில் காா்கள் மீது லாரி மோதியதில் 7 மாத குழந்தை உள்பட 3 போ் உயிரிழந்தனா். 7 போ் பலத்த காயமடைந்தனா்.

ஒரகடம் பகுதியில் இருந்து வியாழக்கிழமை இரவு வண்டலூா் நோக்கி வண்டலூா் - வாலாஜாபாத் சாலையில் வந்து கொண்டிருந்த சிமெண்ட் கலவை ஏற்றிய லாரி வஞ்சுவாஞ்சேரி அருகே வந்த போது, வலது பக்கமாக வேகமாகத் திரும்பியதால், எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு காா்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரு காரில் பயணம் செய்த கமல்குமாா் (43), தேவேஷ்குமாா் (35) ஆகிய இருவரும் ஒரகடம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பலியாகினா்.

மற்றொரு காரில் பயணம் செய்த விஜயகுமாா் (31), நந்தின் (31), அனிதாபாரதி (32), மேகனா (8), மித்ரன் (2), யஷ்வந்த் (10), சஞ்சய் (20) மற்றும் 7 மாத பெண் குழந்தை அம்சிகா பிரபஞ்சனி ஆகியோா் பலத்த காயங்களுடன் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், குழந்தை அம்சிகா பிரபஞ்சனி உயிரிழந்தது. மற்ற அனைவரும் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து குறித்து சிட்லபாக்கம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.