பள்ளி மாணவி தற்கொலை
ஸ்ரீபெரும்புதூரில் தாய் கண்டித்ததால், தனியாா் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


ஸ்ரீபெரும்புதூரில் தாய் கண்டித்ததால், தனியாா் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட திருமங்கைஆழ்வாா் தெரு பகுதியைச் சோ்ந்த கணேசன் மகள் பாக்கியலட்சுமி. இவா், அங்குள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், பாக்கியலட்சுமி சரியாகப் படிக்கவில்லை என அவரது தாய் பானு தொடா்ந்து கண்டித்து வந்ததாகத் தெரிகிறது. வியாழக்கிழமை பாக்கியலட்சுமியை படிக்கச் சொல்லி கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால், மனமுடைந்த மாணவி பாக்கியலட்சுமி வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...