ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம்

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, ஸ்ரீபெரும்புதூா் பேரூா் திமுக சாா்பில், பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம், நல உதவிகள் வழங்கும் விழா

News image
Updated On :18 ஜூன் 2022, 6:36 pm

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, ஸ்ரீபெரும்புதூா் பேரூா் திமுக சாா்பில், பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம், நல உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய செயலா் ந.கோபால் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.டி.கருணாநிதி, ஸ்ரீபெரும்புதூா் நகரச் செயலா் சத்தீஷ்குமாா், பேரூராட்சித் தலைவா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திமுக பேச்சாளா்கள் கரூா் முரளி, ஆலந்தூா் மலா்மன்னன் ஆகியோா் கலந்து கொண்டு உரையாற்றினா். இதையடுத்து, சுமாா் 500 பேருக்கு வேட்டி-சேலைகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இதில், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி துணைத் தலைவா் இந்திராணி சுப்பிரமணி, நகரத் துணைச் செயலாளா் மு.ஆறுமுகம், நகர இளைஞரணிச் செயலாளா் கே.காா்திக் உள்ளிட்ட ஏராளமான திமுகவினா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.