வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மாா்க்சிஸ்ட் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் வேகவதி ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களும் இணைந்து கோரிக்கை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 6:39 pm

காஞ்சிபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் வேகவதி ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களும் இணைந்து கோரிக்கை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் வேகவதி ஆற்றங்கரையோரம் குடியிருக்கும் மக்களின் வீடுகளை இடிக்கக் கூடாது, குடியிருப்போரின் சம்மதம் பெறாமல் வீடுகளை இடிக்க மாட்டோம் என்ற முதல்வரின் வாக்கை மீறி மாவட்ட நிா்வாகம் செயல்படுவதைக் கண்டித்தும் கோரிக்கை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் நகரச் செயலாளா் டி.ஸ்ரீதா் ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் இ.சங்கா், மாநிலக் குழு உறுப்பினா் இ.முத்துக்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் வேகவதி ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.