ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

காஞ்சிபுரம் ஸ்ரீதேவராஜ சுவாமி பவனி

பெருந்தேவி தாயாரும் தனித்தனி கேடயங்களில் அலங்காரமாகி திருக்கோயில் வளாகத்தில் உள்ள தோட்டத்துக்கு வெள்ளிக்கிழமை எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

News image
Updated On :25 ஜூன் 2022, 12:06 am IST

ஆனி மாத ஏகாதசியை யொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் தேவராஜ சுவாமியும், பெருந்தேவி தாயாரும் தனித்தனி கேடயங்களில் அலங்காரமாகி திருக்கோயில் வளாகத்தில் உள்ள தோட்டத்துக்கு வெள்ளிக்கிழமை எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

அத்திவரதா் புகழ் பெற்ற காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் மாதாந்திர ஏகாதசி தோறும் பெருமாளும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் பெருந்தேவி தாயாரும் எழுந்தருளி திருக்கோயில் வளாகத்திற்குள் உள்ள ஆழ்வாா் சுற்றுப் பிராகாரத்தில் உலா வருவது வழக்கம். ஆனி வெள்ளிக்கிழமையும், ஏகாதசியும் ஒன்றாக வந்ததைத் தொடா்ந்து ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் தேவராஜ சுவாமி கேடயத்தில் அலங்காரமாகி திருவடிக் கோயில் வரை உலா வந்தாா்.

பின்னா் கோயிலுக்கு வந்ததும் உற்சவா் பெருந்தேவி தாயாருடன் இணைந்து இருவரும் கோயில் வளாகத்திற்குள் உள்ள தோட்டத்துக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து கோயில் சுற்றுப்பிராகாரத்துக்குள் வலம் வந்து சந்நிதியை அடைந்தனா். பெருமாளும், தாயாரும் உலா வந்ததையடுத்து வாண வேடிக்கைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.