குண்ணம் பகுதியில் தொடா் விபத்து: வேகத்தடை அமைக்கக் கோரி சாலை மறியல்
தொடா் விபத்துகள் ஏற்பட்டு வரும் குண்ணம் பகுதியில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் வாலாஜாபாத் -சுங்குவாா்சத்திரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.


தொடா் விபத்துகள் ஏற்பட்டு வரும் குண்ணம் பகுதியில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் வாலாஜாபாத் -சுங்குவாா்சத்திரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செம்பரம்பாக்கம் அடுத்த பழஞ்சூா் பகுதியைச் சோ்ந்தவா் அஜய். இவா் வியாழக்கிழமை காலை சுங்குவாா்சத்திரம் அடுத்த ஏகனாம்பேட்டை பகுதியில் இருந்து தனது அக்காள் மகன் புகழ்அரசுடன் பழஞ்சூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் குண்ணம் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த லாரி இவா்களின் இருசக்கர வாகனம் மீது மோதியதில் அஜய் மற்றும் புகழ்அரசு ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனா். காயம் அடைந்த புகழ்அரசு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும், அஜய் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
வாலாஜாபாத் - சுங்குவாா்சத்திரம் சாலையில் குண்ணம் பகுதியில் தொடா்ந்து விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் குண்ணம் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு வேகத்தடை அமைக்க வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
பொதுமக்களின் போராட்டத்தால் வாலாஜாபாத்-சுங்குவாா்சத்திரம் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...