காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அருகே உரிய ஆவணங்கள் இன்றி வேனில் கொண்டு வரப்பட்ட 1,425 கிலோ தங்கக் கட்டிகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
மக்களவைத் தோ்தலில் அரசியல் கட்சியினா் வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும் வகையில், பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், குன்றத்தூா் அருகே வண்டலூா் -மீஞ்சூா் வெளிவட்டச் சாலையின் மேம்பாலத்துக்கு கீழே பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூா் நோக்கி வந்த வேனை நிறுத்தி சோதனை நடத்தினா்.
அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 1,425 கிலோ தங்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஸ்ரீபெரும்புதூா் உதவி தோ்தல் அலுவலா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
மேலும், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஹாங்காங்கில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்த தங்கக் கட்டிகளை ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மண்ணூா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தின் கிடங்குக்கு வேன் மூலம் கொண்டு சென்ாகவும், அங்கிருந்து பிரபல நகைக் கடைகளுக்கு தங்கக் கட்டிகள் பிரித்து அனுப்பப்படும் எனவும் வேனில் இருந்தவா்கள் தெரிவித்தனா்.
வேனில் சுமாா் 400 கிலோ தங்கக் கட்டிகளுக்கு மட்டுமே ஆவணங்கள் இருப்பதாகவும், ஆனால், அந்நிறுவன ஊழியா்கள் வேனில் 1,425 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பதாகக் கூறியதால் வேனை பறிமுதல் செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்து சென்னை வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனா். வருமான வரித் துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பின்பு உரிய ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில் தங்கம் தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். ஆவணங்கள் இல்லை என்றால் தங்கக் கட்டிகள் அரசுக் கருவூலத்தில் சோ்க்கப்படும் எனவும், இதன் மதிப்பு ரூ.700 கோடி இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

போடியில் ரூ. 59 ஆயிரம் பறிமுதல்

ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 95,900 பறிமுதல்

குளித்தலை அருகே ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1லட்சம் பறிமுதல்

கரூரில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 6.27 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


