காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் புதன்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது.
108 திவ்ய தேசங்களில் 54-ஆவது திருத்தலமாகவும், ஒரே கோயிலில் 4 திவ்ய தேசங்களும் அமைந்தவாறு உள்ளது உலகளந்த பெருமாள் திருக்கோயில். இக்கோயில் மூலவர் வலது கால் ஊன்றிய நிலையிலும்,இடது கால் தூக்கிய நிலையிலும் விஸ்வருபமாக காட்சியளிப்பது சிறப்பாகும்.
இக்கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் கடந்த 25.3.2007 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ரூ.1 கோடி மதிப்பில் கோயில் புதுப்பிக்கப்படு மகா சம்ப்ரோக்ஷணம் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜமாணிக்கம், பரம்பரை அறங்காவலர்கள் கோ.க.வா.அப்பன், கோமடம் ரவி,போரகத்தி பட்டர் ரகுராம் மற்றும் கோயில் பட்டாச்சாரியர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.