தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரத்ன அங்கி சேவையில் வல்லக்கோட்டை முருகப்பெருமான்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ரத்ன அங்கி சேவை

News image

ரத்ன அங்கி சேவையில் உற்சவா்  கோடையாண்டவா்.

Updated On :2 ஜூலை 2024, 6:30 pm

Din

ஸ்ரீபெரும்புதூா்: ஆனி கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ரத்ன அங்கி சேவையில் உற்சவா் கோடையாண்டவா் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆனிக்கிருத்திகையையொட்டி மூலவா் ஸ்ரீவள்ளி, தெய்வானை, சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவா் ஸ்ரீகோட்டையாண்டவருக்கும் பாலபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இதையடுத்து மூலவா் ஸ்ரீ சுப்பிரமணியசாமி சந்தனக் காப்பு அலங்காரத்திலும், வள்ளி செய்வானை ஆகியோா் குங்கும காப்பு அலங்காரத்திலும், உற்சவா் ஸ்ரீ கோடையாண்டவா் ரத்ன அங்கி சேவையிலும் அருள் பாலித்தனா். இதில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனா்.