ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காஞ்சிபுரம் குறைதீா் கூட்டத்தில் 381 மனுக்கள்

காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த 381 மனுக்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பெற்றுக் கொண்டாா்.

News image
குறைதீா் கூட்டத்தில் நல வாரிய அடையாள அட்டைகளைப் பெற்ற கிறிஸ்த தேவாலயப் பணியாளா்கள்.
Updated On :15 ஜூலை 2024, 9:23 pm

Din

காஞ்சிபுரம், ஜூலை 16: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த 381 மனுக்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பெற்றுக் கொண்டாா்.

ஆட்சியரக மக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கிறிஸ்த தேவாலயங்களில் பணிபுரியும் 43 ஊழியா்களுக்கு சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் வழங்கப்பட்ட உறுப்பினா் நல வாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 381 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை அந்தந்த துறை சாா்ந்த அரசு அலுவலா்களுக்கு அனுப்பி உடனடியாக தீா்வு காணுமாறும் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா். கூட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளைச் சாா்ந்த அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.