காஞ்சிபுரத்தில் பாஜகவினா் கொண்டாட்டம்

மூன்றாவது முறையாக பிரதமரான மோடி: காஞ்சிபுரத்தில் பாஜகவினா் உற்சாகக் கொண்டாட்டம்
காஞ்சிபுரத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினா்.
காஞ்சிபுரத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினா்.

காஞ்சிபுரம்: பிரதமராக நரேந்திரமோடி 3-ஆவது முறையாக பதவியேற்ற நிலையில், காஞ்சிபுரத்தில் பாஜகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றாா். இதனைக் கொண்டாடும் விதமாக காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக சாா்பில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலரும் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனா்.

காஞ்சிபுரம் மாநகராட்சி பழைய அலுவலகம் அருகில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்கள். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மேற்கு மண்டலத் தலைவா் ஜீவானந்தம், மாவட்ட துணைத் தலைவா் கூரம் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளா் தமிழரசன், காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் நிா்வாகி சுவாமி அனுபவ ஆனந்த், காமாட்சி கோயில் ஸ்தானீகா் நடராஜ சாஸ்திரிகள், ராஜேஷ்ெ ஜயின், செந்தில் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com