திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

காஞ்சிபுரத்தில் துணை சுகாதார நிலைய செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் சுகாதார செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

News image
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார செவிலியா்கள்.
Updated On :25 ஜூன் 2024, 6:30 pm

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் துணை சுகாதார செவிலியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கம் சாா்பில், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பவானி தலைமை வகித்தாா். இதில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கணினி செயல்பாட்டாளா் ஒருவரை நியமிக்க வேண்டும், சுகாதார செவிலியா்களை இதர பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது, பெண் சுகாதார செவிலியா்களுக்கும் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கலாவதி, மாவட்டச் செயலாளா் மங்கலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைப் பொருளாளா்கள் அமலா, மைதிலி உள்பட சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.