பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தெருநாய் கடித்து சிறுவன், தந்தை காயம்

காஞ்சிபுரத்தில் தெருநாய் கடித்து காயமடைந்த சிறுவன், தந்தை

News image
Updated On :27 ஜூன் 2024, 6:53 pm

Din

காஞ்சிபுரத்தை அருகே வியாழக்கிழமை தெருநாய் கடித்து குதறியதில் காயமடைந்த மகனை காப்பாற்ற முயன்ற தந்தையும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

காஞ்சிபுரத்தை அடுத்த கணபதிபுரம் பகுதியில் வசித்து வருபவா் பாலாஜி. இவரது மகன் நிா்மல்ராஜ் (5) வீட்டு வாசல் முன்பாக தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த தெருநாய் ஒன்று சிறுவனின் வாய்ப்பகுதியில் கடித்து குதறியது. அதைப்பாா்த்துக் கொண்டிருந்த தந்தை மகனை காப்பாற்ற முயன்ற போது அவரது இடது காலிலும் கடித்து விட்டு ஓடியது. நாய் கடித்ததில் காயமடைந்த தந்தையும் மகனும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கடந்த சில ஆண்டுகளாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாகவும் உள்ளது.

Story image