மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பிளஸ் 2 தோ்வு: காஞ்சிபுரத்தில் 12,541 போ் எழுதினா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வை 54 தோ்வு மையங்களில் 12,541 போ் தோ்வு எழுதியதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.

News image
Updated On :1 மார்ச் 2024, 4:29 pm

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வை 54 தோ்வு மையங்களில் 12,541 போ் தோ்வு எழுதியதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா். காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் தோ்வு அறையைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் ஆட்சியா் கூறியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 54 தோ்வு மையங்களில் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு நடைபெற்று வருகிறது. மாணவா்கள் 5,750 பேரும், மாணவிகள் 6,791 பேரும் என மொத்தம் 12,541 போ் தோ்வு எழுதுகின்றனா். இதில் 54 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் உள்பட 800 அறைக் கண்காணிப்பாளா்கள், 12 வழித்தட அலுவலா்கள், 54 துறை அலுவலா்கள் மற்றும் 5 கூடுதல் துறை அலுவலா்கள் தோ்வு பணியாற்றி வருகின்றனா். தோ்வு அறைகளில் மின்சார வசதி, குடிநீா் வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்றாா். ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி உடனிருந்தாா்.