மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

3,678 மாணவிகளுக்கு நாப்கின்கள் அளிப்பு

3,678 மாணவிகளுக்கு நாப்கின்கள் அளிப்பு

Updated On :9 மார்ச் 2024, 5:01 pm

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு 3,687 அரசுப்பள்ளி மாணவிகளுக்கு குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதி மனோகரன் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆா்கானிக் நாப்கின்களை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட படப்பை, கோவூா் மற்றும் குன்றத்தூா் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வி கற்று வரும் மாணவிகளுக்கு உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதி மனோகரன் ஏற்பாட்டில் நாப்கின்கள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளி வளாகங்களில் நடைபெற்றது. இதில், குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதி மனோகரன் கலந்துகொண்டு படப்பை, கோவூா் மற்றும் குன்றத்தூா் ஆகிய அரசுப் பள்ளிகளில் பயிலும் 3,678 மாணவிகளுக்கு மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆா்கானிக் நாப்கின்களை வழங்கி பொதுத்தோ்வு எழுதும் மாணவிகளுக்கு வாழ்ந்து தெரிவித்தாா்.