மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

காமாட்சி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா நிறைவு

காமாட்சி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா நிறைவு

News image
Updated On :23 மார்ச் 2024, 6:35 pm

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பங்குனி மாத தெப்பத் திருவிழா சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இக்கோயிலில் நிகழ் ஆண்டுக்கான தெப்பத் திருவிழா கடந்த 21 -ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. நிறைவு நாளையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் ஆலய வளாகத்தில் உள்ள தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் 7 சுற்றுகள் வலம் வந்தாா். விழா ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், மேலாளா் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி ஆகியோா் தலைமையில் கோயில் ஸ்தானீகா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா். மேகலாயா தலைமை நீதிபதி தரிசனம்: மேகலயா மாநிலத்தின் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சனிக்கிழமை வந்து மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றாா். ஸ்ரீமடத்தில் மகா பெரியவா் அதிஷ்டானத்திலும், காமாட்சி அம்மன் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்தாா். காஞ்சி சங்கராசாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம், பாஜக மாவட்ட தலைவா் கே.எஸ்.பாபு, பாஜக பிரமுகா் காஞ்சி.வி.ஜீவானந்தம் ஆகியோரும் சந்தித்து ஆசி பெற்றனா்.