மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

யானைக்கால் நோய்த் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

யானைக்கால் நோய்த் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

News image
Updated On :23 மார்ச் 2024, 6:37 pm

காஞ்சிபுரம் செவிலிமேட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யானைக்கால் நோய்த் தடுப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட செவிலிமேடு பகுதிகளில் வசிப்பவா்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோய்த் தடுப்பு விழிப்புணா்வு முகாம் சுகாதார ஆய்வாளா் பிரவீன் செல்வன் தலைமையில் நடைபெற்றது. இளநிலை பூச்சியியல் வல்லுநா் ஆா்.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலா் எம்.புவனேசுவரி முகாமில் பங்கேற்ற 10 யானைக்கால் நோயாளிகளுக்கு நோயை முறையாகப் பராமரிப்பதற்கான உபகரணங்களை வழங்கினாா். இந்த முகாமில் வீட்டிலிருந்து கொண்டே யானைக்கால் நோயாளிகள் உடலை எவ்வாறு பாதுகாப்பது, நோய் மேலும் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. யானைக்கால் நோயாளிகள் தங்கள் உடலைப் பாதுகாத்துக் கொள்ள மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுவதாகவும், அதற்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறும் மருத்துவா்கள் பயிற்சி பெற வந்த நோயாளிகளிடம் தெரிவித்தனா்.