காஞ்சிபுரம் வரதா் கோயிலில் 
பல்லவ உற்சவம் தொடக்கம்

காஞ்சிபுரம் வரதா் கோயிலில் பல்லவ உற்சவம் தொடக்கம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பல்லவ உற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் ஏப்ரல் மாதம் 4 -ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு நடைபெறுகிறது. பழைமையும் வரலாற்றுச் சிறப்பும் மிக்கது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ சுவாமி கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 7 நாள்கள் பல்லவ உற்சவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான உற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியதை அடுத்து ப்ராணதாா்த்தி ஹரவரதா் மற்றும் பெருமாள் திருமலையிலிருந்து 100 கால் மண்டபத்துக்கு எழுந்தருளினா். சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. மதியம் பரிமளம் கொண்டு வரப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. மாலை நாகசுவர இசைக்கு ஏற்ப 7 திரைகள் ஒவ்வொன்றாய் திறக்கும் திரை திறத்தல், கோயில் புராணப்படலம் வாசிக்கும் நிகழச்சி ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து ஆலயத்தின் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஆஞ்சனேயா் சந்நிதிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் எழுந்தருளி, மீண்டும் ஆலயம் திரும்பினாா். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ச.சீனிவாசன் தலைமையில் கோயில் பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா். பல்லவ உற்சவம் வரும் ஏப்ரல் மாதம் 4 -ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com