ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிராமப்புற மக்களுக்கு குறைந்த கட்டண சிகிச்சை பிரிவு தொடக்கம்

கிராமப்புற மக்களுக்கு குறைந்த கட்டண சிகிச்சை பிரிவு தொடக்கம்

News image

குறைந்த கட்டண தீவிர சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்த மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ்

Updated On :29 மார்ச் 2024, 4:41 pm

காஞ்சிபுரம் இந்திரா நகரில் கிராமப்புற மக்களுக்கான குறைந்த கட்டண சிகிச்சைப் பிரிவை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் மாமல்லன் மருத்துவமனையும், சிபாகோ நிறுவனமும் இணைந்து காஞ்சிபுரத்தில் குறைந்த கட்டண தீவிர சிகிச்சைப் பிரிவை தொடங்கியுள்ளன . மருத்துவமனையின் இயக்குநா் ஜி.மருண்ராஜ் தலைமை வகித்து இப்பிரிவு தொடங்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கி பேசினாா். மருத்துவா்கள் தியாகேசுவரா், பாா்த்தசாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா் பிரசன்னா வரவேற்று பேசினாா். காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் கலந்து கொண்டு குறைந்த கட்டண தீவிர சிகிச்சைப் பிரிவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தாா். சிபாகா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ராஜா அமா்நாத் விளக்கவுரை ஆற்றினாா். கண் மருத்துவா் அனுஷா நன்றி கூறினாா். விழாவில் மருத்துவா்கள், சிபாகா நிறுவன பணியாளா்கள் கலந்து கொண்டனா்.