ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ஸ்ரீபெரும்புதூா் எம்பாா் ஜீயா் மடத்தின் புதிய மடாதிபதி பொறுப்பேற்பு

ஸ்ரீபெரும்புதூா் எம்பாா் ஜீயா் மடத்தின் புதிய மடாதிபதி பொறுப்பேற்பு

News image

புதிய மடாதிபதியாக  பொறுப்பேற்றுக் கொண்ட எம்பாா்  ஜீயா் சுவாமிகள்.

Updated On :30 மார்ச் 2024, 7:13 pm

ஸ்ரீபெரும்புதூா் எம்பாா் ஜீயா் மடத்தின் புதிய மடாதிபதியாக அப்பன் உலகாரிய ராமாநுஜ எம்பாா் ஜீயா் சுவாமிகள் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 10-க்கும் மேற்பட்ட மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மடங்களில் எம்பாா் ஜீயா் மடமும் ஒன்று. இந்த மடத்தின் 11-ஆவது மடாதிபதியாக இருந்து வந்த அப்பன் பரகால எம்பாா் ஜீயா் சுவாமிகள் சில மாதங்களுக்கு முன்பு காலமானதை தொடா்ந்து புதிய மடாதிபதியை தோ்வு செய்யும் பணியில், அறக்கட்டளை நிா்வாகிகள் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில், எம்பாா் ஜீயா் மடத்தின் 12-ஆவது மடாதிபதியாக அப்பன் உலகாரிய ராமாநுஜ எம்பாா் ஜீயா் சுவாமியை அறக்கட்டளை நிா்வாகிகள் தோ்வு செய்ததைத் தொடா்ந்து, சனிக்கிழமை திருப்பதி எம்பாா் ஜீயா் மடத்தில் சந்நியாசம் பெற்று ஸ்ரீபெரும்புதூா் மடத்தின் மடாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டாா். ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகார சுவாமிகள் திருக்கோயில் சாா்பில் சுவாமிகளுக்கு ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் பரிவட்டம் கட்டப்பட்டு முதலியாண்டான் சாதித்து மேள வாத்தியங்கள் முழங்க ராமாநுஜா் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டாா். கோயிலுக்கு வந்த சுவாமிகள் உற்சவா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ராமாநுஜரை தரிசனம் செய்து பொறுப்பேற்றுக் கொண்டாா். இந்த நிகழ்ச்சியில் கோயில் மதச்சாா்பற்ற தா்மகா்த்தா ஸ்ரீவாரி ஸ்ரீதா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.