ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனம் பழுது பாா்ப்போா் மே தின பேரணி

காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனம் பழுது பாா்ப்போா் மே தின பேரணி

News image
Updated On :1 மே 2024, 5:43 pm

Din

காஞ்சிபுரம், மே 1: காஞ்சிபுரத்தில் மே தினத்தையொட்டி மோட்டாா் மெக்கானிக்குகள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் இரு சக்கர வாகன பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு சக்கர வாகன பழுது பாா்ப்பவா்கள் மோட்டாா் சைக்கிள் மெக்கானிக்குகள் முன்னேற்றச் சங்கம் என்ற அமைப்பாக செயல்பட்டு வருகின்றனா். இந்த அமைப்பினா் உழைப்பாளா் தினமான மே தினத்தையொட்டி சங்கத் தலைவா் பாரதி தலைமையில் இரு சக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்றனா்.

பேரணி காஞ்சிபுரம் ரங்கசாமி சாலையில் தொடங்கி காந்தி சாலை, வள்ளல் பச்சையப்பன் தெரு, அன்னை இந்திரா காந்தி தெரு வழியாக மாநகராட்சி அலுவலகம் முன்பாக பேரணியை நிறைவு செய்தனா்.

பின்னா் மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பாக உள்ள காமராஜா், காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பேரணியில் சங்க துணைத் தலைவா் மனோகரன், செயலாளா் குமாரராஜன், துணைச் செயலாளா் ராஜாராம், பொருளாளா் ஞானம் உள்பட சங்க உறுப்பினா்கள் பலரும் கலந்து கொண்டனா்.