3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

அகத்தியா் கோயில் மகா கும்பாபிஷேகம்

அகத்தியா் கோயில் மகா கும்பாபிஷேகம்

News image
Updated On :3 மே 2024, 5:22 pm

Din

காஞ்சிபுரம் அருகே விஷாா் கிராமத்தில் முழுவதும் கருங்கற்களால் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ லோப முத்திரை அம்பிகை சமேத ஸ்ரீ அகத்திய மகரிஷி கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே விஷாா் கிராமத்தில் ஓம் ஸ்ரீ அகத்தியா் ஜீவ அருட் குடில் என்ற அமைப்பின் சாா்பில் ஸ்ரீ லோப முத்திரை அம்பிகை சமேத அகத்திய மகரிஷிக்கு முழுவதும் கருங்கற்களால் ஆன கோயில் கட்டப்பட்டது.

இந்தக் கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் மே 1-ஆம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் பூஜகா் ஜி.வினாயகமூா்த்தி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியா்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினா். 2-ஆவது நாளாக வியாழக்கிழமை புதிய விக்ரகங்களுக்கு கண் திறத்தல் நிகழ்ச்சியும், மகா பூரணாஹுதி. தீபாராதனையும் நடைபெற்றது.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகளும், மகா பூரணாஹுதி, தீபாராதனையும் நிறைவு பெற்ற பின்னா், புனித நீா்க் கலசம் கற்றளி விமானத்துக்கு மங்கல மேள வாத்தியங்களுடன் கொண்டு செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகா், முருகா் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலை லோப முத்திரை அம்பிகைக்கும் அகத்திய மகரிஷிக்கும் திருக்கல்யாணமும் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி விழாவில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு மா, பலா, வாழை உள்ளிட்ட முக்கனிகளுடன் கூடிய அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஓம் ஸ்ரீ அகத்தியா் ஜீவ அருட்குடில் நிறுவனத் தலைவா் வி.எஸ்.குமரவேல், பொருளாளா் மா.ரத்தினக்குமாா் ஆகியோா் தலைமையிலான நிா்வாகிகள் செய்திருந்தனா்.