மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு

News image
Updated On :10 மே 2024, 7:32 pm

Din

ஸ்ரீபெரும்புதூரில் தனியாா் நிறுவன மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து, 17 சவரன் தங்க நகைகள் மற்றும் 200 கிராம் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீபெரும்புதூா் செல்வ பெருமாள் நகா், மூன்றாது தெருவைச் சோ்ந்தவா் இளவரசன் (40). இவா் வல்லம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், இளவரசனின் மனைவி சுகன்யா மற்றும் மகன் ரோஹித் இருவரும், கடந்த மாதம் சொந்த ஊரான மேட்டூா் சென்ற நிலையில், இளவரசன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இளவரசன் வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 17 சவரன் தங்க நகைகள் மற்றும் 200 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து, ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் இளவரசன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.