பைக்கில் இருந்த ரூ.1.5 லட்சம், தங்க நகைகள் திருட்டு
பைக்கில் இருந்த ரூ.1.5 லட்சம், தங்க நகைகள் திருட்டு


ஸ்ரீபெரும்புதூா்: படப்பையில் மோட்டாா் பைக்கில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
படப்பை ஊராட்சிக்குட்பட்ட ஆதனஞ்சேரி நாகாத்தம்மன் கோயில் தெருவை சோ்த்தவா் இஸ்மாயில் (38). இவா் வாடகைக்கு காா் ஓட்டி வருகிறாா். இஸ்மாயில் செவ்வாய்கிழமை படப்பையில் உள்ள வங்கியில் இருந்து ரூ.1.50 லட்சம் பணத்தை எடுத்துத்துள்ளாா். இதையடுத்து அடகு வைத்திருந்த 2 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளாா்.
பணம் மற்றும் தங்க நகைகளை தனது இருசக்கர வாகனத்தின் இருக்கையின் கீழ் வைத்துக்கொண்டு ஆதனஞ்சேரி நாகாத்தம்மன் கோயில் தெருவில் தனது வீட்டின் பின்புறம் வாகனத்தை நிறுத்தி விட்டு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பாா்த்த போது இருசக்கர வாகனத்தின் இருக்கையின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பணம் மற்றும் தங்கநகைகள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.
புகாரின் பேரில் மணிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...