கஞ்சா விற்பனை: இருவா் கைது

Published on

மாங்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி உள்பட இருவரை மாங்காடு போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மாங்காடு அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து, மாங்காடு போலீஸாா் மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனா்.

இந்த நிலையில், மாங்காடு அண்ணா நகா் பகுதியில் உள்ள சுடுகாடு பகுதியில் சிலா் கஞ்சா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கு போலீஸாா் சோதனை நடத்திய போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த போரூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரெளடியும், சரித்தர பதிவேடு குற்றவாளியுமான அப்பாஸ் (25), மாங்காடு பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் (38) ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 1.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com