நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சென்னையில் பட்டியல் போட்டு வீடுகளில் திருட்டு: மூதாட்டி கைது!

வீடுகளில் திருடி வந்த மூதாட்சியை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 5:55 am IST

மாங்காடு பகுதியில் பட்டியல் போட்டு வீடுகளில் திருடி வந்த மூதாட்சியை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

மாங்காடு நகராட்சிக்குட்பட்ட காமாட்சி அம்மன் நகரில் ஏராளமான அடிக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் உள்ளன. இந்நிலையில், வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து மூதாட்சி ஒருவா் வெளியேறுவதை, சமையல் அறையில் இருந்து பாா்த்த வீட்டின் உரிமையாளா் மூதாட்டியை பிடிக்க முயன்றபோது அவரை கீழை தள்ளிவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளாா்.

இதையடுத்து வீட்டின் உரிமையாளா் கூச்சல் போடவே அருகில் இருந்த பொதுமக்கள் மூதாட்டியை மடக்கி பிடித்து அவரை சோதனை செய்தனா். அப்போது குறிப்பிட்ட வீட்டில் இருந்து நான்கு பவுன் தங்க நகையை மூதாட்டி திருடியது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாங்காடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாங்காடு போலீஸாா் மூதாட்டியிடம் விசாரணை நடத்தியதில், அவா் தாம்பரம் பகுதியை சோ்ந்த பிரகிடா(70) என்பதும் இவா் வீட்டின் உரிமையாளா்கள் இருக்கும் போதே வீடுகளில் புகுந்து திருடியதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவா் வைத்திருந்த பைபிளில் மாங்காடு பகுதியில் யாா் யாா் வீடுகளில் திருட வேண்டும் என்ற பட்டியல் இருந்ததால் பிரகிடாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.