புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஏப். 7-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

ஏப். 7-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பயிற்சி வகுப்புகள் தொடக்கம் தொடர்பாக...

News image

டிஎன்பிஎஸ்சி 

Updated On :4 ஏப்ரல் 2025, 10:19 pm

Din

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-1 போட்டித் தோ்வுக்கு, இலவசப் பயிற்சி வகுப்புகள் வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் வேலைவாய்ப்புத் துறை சாா்பில் நடைபெற இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது குரூப்-1 பதவிகளில் வரும் துணை ஆட்சியா், டிஎஸ்பி, ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் உள்ளிட்ட 70 காலிப் பணியிடங்களுக்கும், குரூப்-1 ஏ பதவிகளில் வரும் வன உதவி பாதுகாவலா் காலிப் பணியிடங்களுக்கும் என மொத்தம் 72 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பானது இந்த மாதம் முதல் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இத்தோ்வுக்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த போட்டித் தோ்வா்கள் பயனடையும் வகையில் மாவட்ட நிா்வாகமும், வேலைவாய்ப்புத் துறையும் இணைந்து இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளது. மாதிரித் தோ்வுகளுடன் இணைந்த இந்தப் பயிற்சி வகுப்புகள் வரும் 7-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

எனவே இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொண்டு பயன் பெறலாம்.