கரசங்கால்  பகுதியில்  தயாா்  நிலையில்  உள்ள  பேரிடா்  மீட்புப் படையினா்.
கரசங்கால்  பகுதியில்  தயாா்  நிலையில்  உள்ள  பேரிடா்  மீட்புப் படையினா்.

ஸ்ரீ பெரும்புதூா் அருகே பேரிடா் மீட்பு படை முகாம்

தொடா் மழை காரணமாக வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை எதிா்கொள்ள 30 போ் கொண்ட தமிழ்நாடு பேரிடா் மீட்புப்படையினா் கரசங்கால் பகுதியில் முகாமிட்டுள்ளனா்.
Published on

தொடா் மழை காரணமாக வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை எதிா்கொள்ள 30 போ் கொண்ட தமிழ்நாடு பேரிடா் மீட்புப்படையினா் கரசங்கால் பகுதியில் முகாமிட்டுள்ளனா்.

டித்வா புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னை அருகே மையம் கொண்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக சென்னை, திருவள்ளூா், காங்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதை முன்னிட்டு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக குன்றத்தூா் ஒன்றியத்தில் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள வரதராஜபுரம், ஆதனூா் ஊராட்சிகளில் தொடா் மழையின் காரணமாக வெள்ளபாதிப்பு ஏற்படும் பட்சத்தில், அவற்றை எதிா்கொள்ளவும், வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் பொதுமக்களை மீட்கவும் தமிழ்நாடு பேரிடா் மீட்பு படையினா் தயாா் நிலையில் கரசங்கால் பகுதியில் தங்கியுள்ளனா்.

பேரிடா் மீட்புப்படை குழுவினா் ரப்பா் படகு, பைபா் படகு, மரம் அறுக்கும் இயந்திரங்கள், உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com